நல்ல தூக்கத்திற்கு சில 'டிப்ஸ்

 நல்ல தூக்கத்திற்கு சில 'டிப்ஸ்:



தூக்கம் வாழ்க்கையில் மிக அவசியம். அது இல்லாவிட்டால் வாழ்க்கை யில் வேதனைதான் மிஞ்சும்.

சரியான தூக்கம் இல்லாவிட் டால் கோபம் வரும்; எல்லாவற் றுக்கும் உணர்ச்சிவசப்பட நேரும். நெருங்கியவர்களிடம் கூட எரிந்து விழுவீர்கள். இதனால் சில சமயம் உறவே பாதிக்கப்படலாம். இதையெல் லாம் தவிர்க்க தினமும் 7-8 மணி நேர தூக்கம் அவசியம் என்கிறார்கள் வல்லுனர்கள்.

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற செய்தபோது, செய்தபோது, அந்த மாணவர்கள் மற்றவர்களை விட நிம்மதியாகத் தூங்கியிருப்பது தெரிந்தது.

பிற்பகல் சாப்பாட்டை உரிய நேரத்தில் முடிப்ப வர்களுக்கு இரவு நன்றாகத் தூக்கம் வரும்.

அதிகமாக சாப்பிட்டாலும், நேர வரைமுறை யின்றி சாப்பிட்டாலும் இரவு தூக்கம் கெடுமாம்.

படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி

நேரத்துக்கு முன்பு காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் அதேபோல், டி.வி பார்ப்பது, இன்டர்நேதல் கேம்ஸ் விளையாடுதல்  ஆகியவற்றயும் தவிர்க்க.

படுப்பதற்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் இரவு நன்கு தூக்கம் வரும்.


ஆக்டிவ்வாக இருப்பவர்களுக்கு தூக்கம் நன்றாக வரும்.


இதற்கு ஒரே வழி, நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது.

படுக்கையில் படுத்தபடி டி.வி பார்ப்பதும் புத்தகம் படிப்பதும் தூக்கத்துக்கு முதல் எதிரி

படுக்கையறையில் அதிக வெளிச்சத்தைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை 'டிம்"லைட் இருக்கட்டும். சுற்றிலும் சத்தம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு தூங்கினால், அந்தத் தூக்கம் சுகம்.


படுக்கையில் மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தினால், தூக்கம் மேலும் சுலபமாக வரும்.

இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி

நன்றாகத் தூங்கினால், நோய்த்தொற்றுகள் நம்மை அண்டாது. மூளையின் செயல்திறன் கூடும். இதயப் படபடப்பு இருக்காது. ரத்த அழுத்தம் ஏறாது. முகம் தெளிவாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.


Comments

Popular posts from this blog

How to prevent Hair loss and promotes hair growth, Vitamin intake to prevent hair Loss and promote hair growth

Applying coconut oil on your body every night before going to sleep has so many benefits! Benefits of Applying Coconut Oil:

How to get glowing young skin| what keeps skin looking young|what keeps your skin young| what to eat for young skin | young skin care | food to get young glowing skin